Friday, December 4, 2009

கான்டிராக்டில் நீதிபதிகள்

சமீபத்திய மத்திய அமைச்சரவை சுவாரசியமான முடிவுகள் சிலவற்றை எடுத்துள்ளது.

கான்டிராக்ட் அடிப்படையில் மாதம் ரூ. 1 லட்சம் சம்பளத்திற்கு, 1500 நீதிபதிகளை நியமிக்க மத்திய அமைச்சவரை ஒப்புதல் அளித்துள்ளது.
ஏகப் பட்ட வழக்குகள் தேங்கி போய் உள்ளது. ஓரளவு குறைய வாய்ப்புண்டு. அதே சமயம் இந்த நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் போன்ற தலைவலிகள் கிடையாது. அரசுக்கு ஏகப் பட்ட லாபம்.

தேசிய வழக்கு நிலுவை ஆணையம் என்ற அமைப்பை உருவாக்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அப்பாடா தேர்தல் ஆணையம் போல ஒரு அமைப்பு. சும்மா சும்மா விடுப்பு விட்டு விளையாடும் அமைப்பிற்க்கு ஒரு கடிவாளம் போட கூடும்.பருவகால (கோடைகால) விடுமுறை பள்ளி மாணவர்களுக்கு இருப்பது போல நீதிமன்றத்திற்க்கு தேவையா என்ன?

7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கத்தக்க அனைத்து குற்றங்களிலும், ஒருவரை கைது செய்வதற்கான காரணங்களை சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி எழுத்துமூலம் எழுதித்தர வேண்டும்.
இதனால் என்ன பயன் என்று புரியலே.. :( குறைவான கால குற்றத்திற்க்கு கைது செய்து காலம் தாழ்த்தி இழுத்தடிப்பது தானே தற்போது நடைமுறையில் இருக்கு.

தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு. கொஞ்சமாவது காடுகள் காப்பாற்ற பட்டால் சரி.

அதேசமயம், கல்வி தீர்ப்பாயம் குறித்த திட்டத்தை அமைச்சர்களைக் கொண்ட குழுவின் ஆலோசனைக்கு அனுப்பி வைக்கவும் அமைச்சரவை முடிவு செய்தது.
அவசரமான தேவையா தெரியலே. மெதுவா வரட்டும்.

ரூ. 10,000 கோடி மதிப்பீட்டில், பாதுகாப்புப் படையினருக்கான ஆப்டிகர் பைபர் கேபிள் அமைக்கும் பணியில் சீன நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது என மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஏனோ சீனாவிற்க்கு சிரம தசை ஆரம்பம் போல தான் தெரியுது. காரணம் இது போன்ற மக்களாட்சி நாடுகளில் இப்படி குறிப்பிட்டு நாட்டு நிறுவனங்கள் தடை என்பது அவ்வளவு எளிது அல்ல. இதற்க்கு முன்னர் நம் நாட்டிலேயே கம்யூனிஸ்டுகள் அமெரிக்க ஏகாதிபத்தியம் குறித்து அறிக்கை தான் விடுவார்களே தவிர இப்படி அமெரிக்க நிறுவனங்கள் எதற்க்கும் அனுமது கூடாது என்று அமலாக்கியதில்லை. வெளியே ‍‍பெரிசா அறிக்கை தான் விடுவார்கள்.

இன்றைய அளவில் இது ஒரு சிறிய ஆரம்பம் தான் எனினும் காலப் போக்கில் பிற நாடுகளும் இந்த தடை நடவடிக்கைகள‍ை அமல்படுத்த ஆரம்பிக்கும். ‍ஏனெனில் அனைவருக்கும் அவரவர் நாட்டு பாதுகாப்பில் சீன என்ன ஊடுருவல் செய்யுமோ என்ற அச்சம் தானாக பிறக்குமே... :)

Read more...

Saturday, November 28, 2009

செவ்வாயில் உயிரினம் : நாசா

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்திருக்க கூடும் என்பது குறித்து நாசா புதிய அறிவிப்பு விடும் என்று எதிர்பார்க்க படுகிறது. ஆனால் வித்தியாசமாக செவ்வாயில் ஆராயமல் அண்டார்டிக் பகுதியில் கடந்த 1996 ம் ஆண்டு ஒரு பாறையானது 13,000 ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்து பூமியில் விழுந்தது என்று அடையாளம் காணப் பட்டு, அதற்க்கு 'அலென் ஹில்ஸ் 84001' என்றும் பெயரிட்டுள்ளார்கள்.

அந்த பாறையில் உயிர்த் தன்மைக் கொண்ட படிமங்கள் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் அது செவ்வாயில் இருந்த உயிரிகள் என்பதை பெரும்பாலோனோர் ஏற்றுக் கொள்ளாது நிராகரித்தனர். அந்த பாஸில்கள் பாறை பூமியில் மோதியதால் ஏற்பட்ட பூமியை சார்ந்த உயிர்மங்கள் என்று முடிவானது.

1996 ல் இருந்ததை விட இன்றைக்கு மிக அதி நவீன நுண்ணிய நோக்கிகள் (மைக்ரோஸ்கோப்புகள்) வந்து விட்டன. அவற்றின் உதவியுடன் கேத்தி தாமஸ்-கெர்டா என்ற நாசாவின் விஞ்ஞானிகள் மீண்டும் ஆராய தொடங்கினர். அவர்கள் ஆராய்ச்சியின் முடிவில் கார்பொனைட் மற்றும் மக்னீஸிய உலோக படிகங்களை அந்த பாறையில் கண்டறிந்துள்ளார்கள். இவ்வாறு அந்த பாறையில் காணப்படும் உலோகங்கள் நமது பூமியின் வழமைக்கு மாறாக வேதியியல் மற்றும் இயற்பியல் தன்மைகள் அடங்கியதாக உள்ளன.
இந்த உலோக படிகங்கள் 13,000 ஆண்டுகளுக்கு முன் உண்டானவ‍ை அல்ல, நிச்சயமாக அதற்க்கு முற்காலத்தே (செவ்வாயில்) உருவாகியிருக்க வேண்டும்.

இந்த பாறையில் உள்ள படிமங்கள் பூமியில் உண்டானவைகள் அல்ல என்பது நிரூபிக்க பட்டால் சூரிய குடும்பத்தில் உயிரினங்கள் தோன்றியது குறித்த அறிவு மேலும் அதிகமாகும் என்பதாக இங்கிலாந்தின் 'அஸ்ட்ரானமி நவ்' இதழின் துணையாசிரியர் எமிலி பால்ட்வின் கூறியுள்ளார்.

இது குறித்த மேலதிக தகவல் கட்டுரை சுட்டி

Read more...

Thursday, November 26, 2009

ஆங்கிலத்தை கெடுக்கும் இந்தி

ஆங்கிலத்தை கெடுக்கும் இந்தி

நண்பர் செல்வன் அவர்கள் அனுப்பியிருந்த மடலானது ஆங்கிலத்தை இந்தி எந்தளவு கெடுக்கிறது என்பதை விளக்குகிறது...

உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய் என்ற கதையாய் உலக மொழிகளை எல்லாம் கெடுத்து வந்த ஆங்கிலத்தை இப்போது இந்தி கெடுத்து கர்ப்பமாக்கிவிட்டதாக பிபிசி கூறியுள்ளது.

தமிழில் ஆங்கிலம் கலந்து தமிங்கிலம் உருவானது போல் இந்தியில் ஆங்கிலம் கலந்து இங்கிலம் உருவானது.இந்திகாரர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதாலும் பிரிட்டனில் குடியேறிகள் அதிகரிப்பதாலும் அரசியின் ஆங்கிலத்தில் இந்தோ-ஆங்கில-இந்தி வார்த்தைகள் அதிகம் கலந்துவிட்டனவாம்.

ஹிங்லிகீசை அதிகம் பயன்படுத்துவது ஷோபா டே, சல்மான் ருஷ்டி மாதிரி இந்திய வமசாவளி எழுத்தாளர்களாம்.இந்தியர்களுடன் கிரிக்கட் விளையாடும் பிரிட்டிஷ் குழந்தைகள் பக்கா, பத்மாஷ் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்களாம். வைப்பாட்டியை குறிக்க இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஸ்டெப்னி என்ற சொல் ஆங்கில அகராதியில் ஏறிவிட்டதாம். ஸ்டெப்னி தெரு என்ற பிரிட்டிஷ் தெருவில் தான் ஸ்டெப்னி டயர்கள் முன்பு உற்பத்தி செய்யப்பட்டன.இப்போது நம்மாட்களின் புண்ணீயத்தால் ஸ்டெப்னி என்ற வார்த்தை அகராதியில் ஏறியுள்ளது.

இது போக சுடி (சுடிதார்),பங்களா மாதிரி வார்த்தைகள் அரசியின் ஆங்கிலத்தில் ஏறியுள்ளன என குறிப்பிடும் பிபிசி இந்த மொழிகலப்பை எண்ணி வருத்தப்படும் என்று தானே நினைக்கிறீர்கள்?அப்படி நினைத்தால் அவர்களுக்கும் நம்மூர் மொழிதூய்மையாளர்களுக்கும் என்ன வித்தியாசம்?

"இது என் மொழி.இது மாறாமல் இருக்கவேண்டும் என மக்கள் நினைக்கலாம்.ஆனால் யதார்த்தம் அப்படி இல்லை.ஸேக்ஸ்பியரின் ஆங்கிலம் சாசரின் ஆங்கிலத்தில் இருந்து வேறுபட்டது.மொழிகளின் பரிணாம வளர்ச்சி நிற்கபோவதில்லை" என அழகாக கட்டுரையை முடிக்கிறது பிபிசி.

--
செல்வன்

... சும்மா சொல்ல கூடாது நமக்கு தான் பிரச்சினை என்று பார்த்தால் எல்லாருக்கும் அவரவர் விரலுக்கு தகுந்த வீக்கம் இருக்கும் போல தான்... :)

Read more...

Wednesday, November 25, 2009

பாராட்டும், வாழ்த்துகளும் பிரதமரே, குடியரசு தலைவரே..!!

இன்றைக்கு இரண்டு முக்கிய ‍செய்திகள் படிக்க நேர்ந்தது.
உடனே நம்ம பிரதமரையும், குடியரசு தலைவரையும் பாராட்ட
தோன்றியது. செய்தியும், விவரமும்....

சீனாவின் பொருளாதார வளர்ச்சி, இந்திய பொருளாதார வளர்ச்சியை விட முன்னணியில் உள்ளது. ஆனால், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியை விட, அடிப்படை மனித உரிமைகள், கலாசாரம் மற்றும் மதரீதியான கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது மிகவும் அவசியம். எனவே, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் செயல்பாடு, சீனாவின் செயல்பாட்டை விட பின்தங்கி இருந்தாலும், சீனாவின் பாதையை தேர்ந்தெடுக்க நான் விரும்பவில்லை. எப்போதும் இந்திய பாதையிலேயே செல்ல விரும்புகிறேன். இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.


செய்தி தினமலர் சுட்டி: http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4260

இதை விட சிறப்பாக ஒரு சனநாயக தலைவர் கருத்து சொல்ல இயலாது. எப்படியோ சுதந்திரம் பெற்ற போது இருந்த தலைவர்கள் இப்படி கருதியதால் இன்றைக்கு நாங்கள் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெற்று இன்புறுகிறோம். எங்கள் சந்ததியினருக்கும் இது கிடைக்கும் என்ற நம்பிக்கை வலுத்து வருகிறது.

ஜனாதிபதி பிரதிபா பட்டீல் சுகோய் -30 எம்.கே.ஐ., ரக போர் விமானத்தில் வெற்றிகரமாக பயணம் மேற்கொண்டார். சர்வதேச அளவில் சு‌கோய் போர் விமானத்தில் பயணம் செய்த முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை நிலைநாட்டினார். அவர் புனேயில் இருக்கும் லோஹேகான் விமானப்படை தளத்தில் இருந்து சரியாக காலை 11 மணி அளவில் சுகோய்- 30 எம்.கே.ஐ., போர் விமானத்தில் பயணத்தை துவக்கினார். சுமார் 30 நிமிடங்கள் பயணம் நீடித்தது. ஜனாதிபதி பயணித்த விமானத்தை விங் கமாண்டர் எஸ்.சாஜன் இயக்கினார்.

செய்தி தினமலர் சுட்டி : http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1594

சமூகத்தில் ஆண், பெண் இனப் பேதம் அடிமட்டத்தில் ஆங்காங்கே இருந்தாலும் பாலின பாகுபாடு இன்றி இந்திய நிர்வாகத்தில் பெண்களுக்கு கிடைத்து வரும் உரிமைகள் சில வளர்ந்து நாடுகளிலேயே கிடைக்காத அளவு உள்ளதாக இருக்கிறது. விமான பயணத்தினால் பெண்களுக்கு பெரிய நன்மை என்று அர்த்தம் கிடையாது. இந்திரா, பிரதிபா போன்று எந்த பெண்மணிகள் வந்தாலும் நம் சமூகம் சரி சமமாகவே நடத்துகின்றது என்பது மிகவும் மகிழ்வான விசயமே.

பாராட்டும், வாழ்த்தும் சொல்ல இமயமலையை நகர்த்தினால் தான் செய்யனும் என்று இல்லையே... :)

Read more...

Friday, November 20, 2009

கோழி வழி.. தனி வழி..!!

என் வழி.. தனி வழி...
...என்பது நம்ம திரை நட்சத்திர தலைவர்கள் பஞ்ச் டயலாக். ஆனால் நம்ம பக்கத்து மாநிலத்துக்காரங்க நம்ம ஊரு கோழிகளுக்கு தனி வழி போட்டு கொடுத்திருக்காங்க. நாம பாட்டுக்கு கறி கோழி மற்றும் முட்‍டை உற்பத்தி ரொம்ப அதிகமா செய்து தள்ளிடறோம். இது கேரளா அரசுக்கு நெருடலா இருந்திருக்கும் போல. பார்த்தாங்க போடு வரியை என்று ‍எக்கச்சக்கமா வரிய போட்டு தள்ளிட்டாங்க.

சரி அதையும் கட்டிட்டு போக நாம தயாரே... கூட்டமும், வரிசையும் ரொம்ப அதிகமா இருக்குது. எல்லையோர சுங்க சோதனை சாவ‍டிகளில் பார்த்தாக்கா தெரியும். மைல் கணக்கிலே நம்ம ஊரு வாகனங்கள் வரிசை கட்டி நிற்க்கும். அங்கிட்டு இருந்து தமிழகம் வருவதற்க்கு வரிசையே இருக்காது. இப்ப வரிசையில் நின்னு வரி கட்டி போறதுக்குள்ளே கோழிகள் ரொம்ப நொந்து போகுது (உட்டா செத்தே போயிடும்) என்று கோழி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்கள் போய் கேரளா மந்திரிய பார்த்து பேசி தனியா கோழிக்கு வரி வாங்க என்ற கவுண்டர் போட ஏற்பாடு செய்திருக்காங்க.

எப்படியோ மற்ற சமான்கள் ஏற்றிய வண்டிகள் ‍எல்லாம் நீண்ட வரிசையில் காத்திருக்க...

கோழி வழி... தனி வழி..!!

Read more...

Wednesday, November 18, 2009

இந்தோ-ரஷ்யா புதிய வர்த்தக புரட்சி...!!

சமீபத்தில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கைகள் இந்திய, ரஷ்ய வர்த்தகமானது மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருவதாக தெரிவிக்கின்றது. வீட்டு உபயோக பொருள்கள் சந்தையானது இந்தியாவை காட்டிலும் பல மடங்கு அதிகமாக உள்ளதால் நிறுவனங்கள் மும்மரமாக சந்தையை பிடிக்க முயன்று வருகின்றன.

டாடா தனது டீ, கார் போன்றவற்றையும், ரிலையன்சு காரங்க பெட்ரோல் மற்றும் எண்ணெய் சமாச்சாரங்களிலும், மல்லையா சீமை சரக்‍கையும், மருந்து நிறுவனங்கள் என்றும் பலரும் களமிறங்கியுள்ளனர்.

கடந்த 2008 ம் ஆண்டு 6.9 பில்லியன் டாலர் அளவு இரு தரப்பு வர்த்தகம் நடந்திருக்கு. இதே போக்கில் சென்றால் அடுத்த 2010ம் ஆண்டு 10 பில்லியனை எட்டி விடும் என்று ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.

ஆனாலும் நம்ம பங்காளி சீனக் காரவிகளும் போட்டிக்கு வருவாங்க.. பார்ப்போம் போட்டியினை ஒரு கை...

அப்ப திரும்ப அந்த கால சோவியத் ரஷ்யா பொஸ்தகம் வருமான்னு பக்கத்துட்டு அண்ணாச்சி கேட்கிறாரு...


செய்தி மூலம் : மீண்டும் மலர்கிறது இந்திய-ரஷ்ய வர்த்தக உறவு

Read more...

Tuesday, November 17, 2009

உலக பணக்கார நகரமாக நம்ம ஊருக...

இன்றைய தினமலரில்...


உலக பணக்கார நகரமாக டில்லி, மும்பை வரும்

லண்டன் : இந்தியாவில் அமைந்துள்ள டில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள், பெரியளவில் பொருளாதார வளர்ச்சியடைந்து, வரும் 2025ம் ஆண்டு, உலகிலேயே பெரிய பணக்கார நகரங்களாக திகழும் என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



உலகில் அமைந்துள்ள பல்வேறு நகரங்கள் குறித்து பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் நிறுவனம் ஆய்வு ஒன்று நடத்தியது. இதில், பல்வேறு நகரங்கள் வேகமான பொருளாதார வளர்ச்சி அடைந்து வருவது தெரிய வந்துள்ளது.



இதுகுறித்து வெளியிடப்பட்ட ஆய்வு தகவல்:உலகில் அமைந்துள்ள பெரிய நகரங்கள் பலவும் அடுத்த 15 ஆண்டுகளில் வேகமான வளர்ச்சி அடைந்து வருகின்றன. டில்லி, காங்க்சவ், ரியோ டீ ஜெனிரோ, இஸ்தான்புல் மற்றும் கெய் ரோ ஆகிய நகரங்கள், வரும் 2025ம் ஆண்டுக்குள் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.தற்போது, டோக்கியோ, நியூயார்க், லாஸ்ஏஞ்சல்ஸ், லண்டன் மற்றும் சிகாகோ ஆகிய ஐந்து நகரங்கள் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ளன.தற்போது பொருளாதார வளர்ச்சியில், 25வது இடத்தில் இருக்கும் ஷாங்காய், வரும் 2025ம் ஆண்டு 9வது இடத்திற்கு முன்னேறும்.



அதே போன்று 29வது இடத்தில் இருக்கும் மும்பை நகரம், வரும் 2025ம் ஆண்டு 11வது இடத்திற்கும், 39வது இடத்தில் இருக்கும் பீஜிங் 17வது இடத்திற்கும், 10வது இடத்தில் இருக்கும் சாவ் பாவ்லோ மற்றும் பிரேசில் ஆகியவை 6வது இடத்திற்கும் முன்னேறும்.ஷாங்காய், பீஜிங் மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் ஆண்டுக்கு, 6 சதவீதம் முதல் 7 சதவீதம் வளர்ச்சியடைந்து வருகின்றன. ஆனால், லண்டன், நியூயார்க், டோக்கியோ மற்றும் சிகாகோ ஆகிய நகரங்கள் ஆண்டுக்கு 2 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்து வருகின்றன.அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த சில நகரங்களின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த 15 ஆண்டுகளில், மெதுவாக சரிவை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.




.... கட்டுரை வந்திருக்கு. சென்னை எல்லாம் எப்ப இந்த பட்டியலுக்கு வருமோ தெரியலையே...

Read more...

Saturday, October 17, 2009

நாமும் நரகாசுரர்களோ..?

சில நாட்கள் முன்னர் விலங்கியல் பூங்காவிற்க்கு போய் இருந்த போது வலைகளுக்கு உள்ளே இருந்த பறவைகள் குறித்து பேசும் போது அவைகளை பொறுத்த வரை காலம் காலமாக நாம் அழிக்க இயலா நரகாசுரர்களா இருப்பதாக தோன்றியது.

என்ன அவைகளை காக்க என்று நம்மை வதம் செய்து மீட்பளிக்க எந்த பகவானும் வரமாட்டாரே... என்றெல்லாம் மனவோட்டம். கஜேந்திர மோட்சம் அளித்ததுடன் ஆண்டவன் ஆயசமாகி விட்டாரோ..?



ஒரு வகையில் பார்க்க போனால் வேட்டைகாரர்களிடமிருந்து இவைகளை காப்பாற்றியுள்ளதாக மனம் மகிழ்ந்துக் கொண்டாலும் இவைகள் இப்படியா இருக்க வேண்டியவை... அந்த வானமே எல்லையாய் பறக்க வேண்டியவை அல்லவா... தங்க கூண்டே எனினும் சுதந்திரம் இன்மை கொடுமையே.

Read more...

தீபாவளி வாழ்த்துகள்..!!


தீபாவளி வாழ்த்துகள்..!!

அனைத்து நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கும் எமது இனிய மனமார்ந்து தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...



Read more...

Wednesday, April 15, 2009

சத்யம் - டெக் மகிந்திரா

சத்யம் நிறுவனத்தை டெக்மகிந்திரா நிறுவனம் கையகப் படுத்தியுள்ளது.
பலத்த போட்டியில் கிட்டதட்ட தனது அடுத்த நிலை போட்டியாளரை விட 20 சதம்
அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. அந்தளவு அதில் லாபம் இருக்க போகிறதா அல்லது எல்அண்டி தன்னிடம் ஏற்கனவே கணிசமான பங்கு கைவசம் உள்ளது என்ற மனோபாவத்தில் விலையை சற்று குறைவாக கேட்டிருந்ததோ என்னவோ...

எப்படியோ இந்தியா போன்ற வளரும் நாட்டில் இவ்வளவு பெரிய நிறுவனம் அதிக சேதமின்றி கைமாறியது மிகவும் குறிப்பிட தக்க விசயமே.
இது குறித்து நாஸ்காம் தலைவர் சோம் மித்தல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்...
'சரியாக 100 நாட்களில் மீ்ண்டும் சத்யம் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியுள்ளது சாதாரண விஷயமல்ல. பெரும் சாதனை. அந்த சாதனையைச் செய்தது இந்திய அரசு தான் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்ள வேண்டும். அரசின் இந்த முயற்சிக்கு முடிந்த வரை கைகொடுத்தவர்கள் சத்யம் வாடிக்கையாளர்களும் சக நிறுவனங்களும். உலகின் வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாத ஒரு சந்தோஷமான நிகழ்வு இது' என்கிறார்.

உண்மைதான் அதிக சேதாரம் இன்றி நிறுவனம் காப்பாற்ற பட்டு விட்டது. பார்ப்போம் அதிக விலை கூறி வாங்கிய பின் பணம் செலுத்தும் போது
சில பிரச்சினைகள் ஏற்படும் பல இடங்களில். மகிந்திரா நிறுவனங்கள் அவற்றையும் வெற்றிகரமாக முடித்து கைக் கொள்ள வாழ்த்துவோம்.

Read more...

Tuesday, April 14, 2009

மேல்நாட்டோர் வியப்பு..

நம்மை பார்த்து பிற நாட்டோர் வியந்தால் தான் நமக்கு பெருமை..
இது போல ஒரு மைல் கல் எந்த நாட்டிலாவது கண்டதுண்டா..?
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..

Read more...

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!!

நண்பர்கள் உறவுகள் அனைவருக்கும்
எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
விரோதி ஆண்டில் அனைத்து விரோதமும் அழியட்டும்..!!

இந்த வலைப்பதிவு இன்று முதல் துவங்குகிறேன்.
இனிய அனுபவமாக அமையும் என்றே எண்ணுகிறேன்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP