இந்தோ-ரஷ்யா புதிய வர்த்தக புரட்சி...!!
சமீபத்தில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கைகள் இந்திய, ரஷ்ய வர்த்தகமானது மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருவதாக தெரிவிக்கின்றது. வீட்டு உபயோக பொருள்கள் சந்தையானது இந்தியாவை காட்டிலும் பல மடங்கு அதிகமாக உள்ளதால் நிறுவனங்கள் மும்மரமாக சந்தையை பிடிக்க முயன்று வருகின்றன.
டாடா தனது டீ, கார் போன்றவற்றையும், ரிலையன்சு காரங்க பெட்ரோல் மற்றும் எண்ணெய் சமாச்சாரங்களிலும், மல்லையா சீமை சரக்கையும், மருந்து நிறுவனங்கள் என்றும் பலரும் களமிறங்கியுள்ளனர்.
கடந்த 2008 ம் ஆண்டு 6.9 பில்லியன் டாலர் அளவு இரு தரப்பு வர்த்தகம் நடந்திருக்கு. இதே போக்கில் சென்றால் அடுத்த 2010ம் ஆண்டு 10 பில்லியனை எட்டி விடும் என்று ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.
ஆனாலும் நம்ம பங்காளி சீனக் காரவிகளும் போட்டிக்கு வருவாங்க.. பார்ப்போம் போட்டியினை ஒரு கை...
அப்ப திரும்ப அந்த கால சோவியத் ரஷ்யா பொஸ்தகம் வருமான்னு பக்கத்துட்டு அண்ணாச்சி கேட்கிறாரு...
செய்தி மூலம் : மீண்டும் மலர்கிறது இந்திய-ரஷ்ய வர்த்தக உறவு
0 comments:
Post a Comment