ஆங்கிலத்தை கெடுக்கும் இந்தி
ஆங்கிலத்தை கெடுக்கும் இந்தி
நண்பர் செல்வன் அவர்கள் அனுப்பியிருந்த மடலானது ஆங்கிலத்தை இந்தி எந்தளவு கெடுக்கிறது என்பதை விளக்குகிறது...உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய் என்ற கதையாய் உலக மொழிகளை எல்லாம் கெடுத்து வந்த ஆங்கிலத்தை இப்போது இந்தி கெடுத்து கர்ப்பமாக்கிவிட்டதாக பிபிசி கூறியுள்ளது.... சும்மா சொல்ல கூடாது நமக்கு தான் பிரச்சினை என்று பார்த்தால் எல்லாருக்கும் அவரவர் விரலுக்கு தகுந்த வீக்கம் இருக்கும் போல தான்... :)
தமிழில் ஆங்கிலம் கலந்து தமிங்கிலம் உருவானது போல் இந்தியில் ஆங்கிலம் கலந்து இங்கிலம் உருவானது.இந்திகாரர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதாலும் பிரிட்டனில் குடியேறிகள் அதிகரிப்பதாலும் அரசியின் ஆங்கிலத்தில் இந்தோ-ஆங்கில-இந்தி வார்த்தைகள் அதிகம் கலந்துவிட்டனவாம்.
ஹிங்லிகீசை அதிகம் பயன்படுத்துவது ஷோபா டே, சல்மான் ருஷ்டி மாதிரி இந்திய வமசாவளி எழுத்தாளர்களாம்.இந்தியர்களுடன் கிரிக்கட் விளையாடும் பிரிட்டிஷ் குழந்தைகள் பக்கா, பத்மாஷ் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்களாம். வைப்பாட்டியை குறிக்க இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஸ்டெப்னி என்ற சொல் ஆங்கில அகராதியில் ஏறிவிட்டதாம். ஸ்டெப்னி தெரு என்ற பிரிட்டிஷ் தெருவில் தான் ஸ்டெப்னி டயர்கள் முன்பு உற்பத்தி செய்யப்பட்டன.இப்போது நம்மாட்களின் புண்ணீயத்தால் ஸ்டெப்னி என்ற வார்த்தை அகராதியில் ஏறியுள்ளது.
இது போக சுடி (சுடிதார்),பங்களா மாதிரி வார்த்தைகள் அரசியின் ஆங்கிலத்தில் ஏறியுள்ளன என குறிப்பிடும் பிபிசி இந்த மொழிகலப்பை எண்ணி வருத்தப்படும் என்று தானே நினைக்கிறீர்கள்?அப்படி நினைத்தால் அவர்களுக்கும் நம்மூர் மொழிதூய்மையாளர்களுக்கும் என்ன வித்தியாசம்?
"இது என் மொழி.இது மாறாமல் இருக்கவேண்டும் என மக்கள் நினைக்கலாம்.ஆனால் யதார்த்தம் அப்படி இல்லை.ஸேக்ஸ்பியரின் ஆங்கிலம் சாசரின் ஆங்கிலத்தில் இருந்து வேறுபட்டது.மொழிகளின் பரிணாம வளர்ச்சி நிற்கபோவதில்லை" என அழகாக கட்டுரையை முடிக்கிறது பிபிசி.
--
செல்வன்
4 comments:
//.. சும்மா சொல்ல கூடாது நமக்கு தான் பிரச்சினை என்று பார்த்தால் எல்லாருக்கும் அவரவர் விரலுக்கு தகுந்த வீக்கம் இருக்கும் போல தான்... :)//
Correcta soneenga thala !
நன்றிங்க அகல்விளக்கு....
அனைவருக்கும் அவரவருக்கு தகுந்த மாதிரி ஏதாவது பிரச்சினை வந்து விடுகிறது.
(அய்யய்யோ எனக்கு கூட பின்னூட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்கப்பா... :) )
ஆங்கிலம் கலக்காமல் தூய்மையாக
மொழியாப் பேசமுடியாத மக்கள் இந்தியமக்கள்.
உங்களுக்கு பின்னூட்டம் இட்டவரால்
ஆங்கிலக்கலப்பு இல்லாமல் பின்னூட்
டம் ஒரு வரிகூட இடமுடியவில்லையே
இதுதான் இந்திய மக்களின பிரச்சினையே.
உங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றிங்க Thevesh. உங்க பெயரை தமிழில் எப்படி அழைப்பது என்று புரியலே.
//Correcta soneenga thala !
இதை...
Sariyaga soneenga thala ! என்று போட்டிருந்தால் தமிழ் உள்ளீடு செய்ய பிரச்சினை என்று எடுத்திருந்திருக்கலாம். Correcta என்பது ஆங்கில கலப்பே...
//ஆங்கிலம் கலக்காமல் தூய்மையாக
மொழியாப் பேசமுடியாத மக்கள் இந்தியமக்கள்.
அன்றைய சமூகத்தில் ஆங்கிலம் பேசுவது என்பது படித்தவர்கள் என்று அடையாளம் காட்ட உதவியது. அந்த மனோபாவம் இன்னமும் முற்றிலும் நீங்கவில்லை.
Post a Comment