பாராட்டும், வாழ்த்துகளும் பிரதமரே, குடியரசு தலைவரே..!!
இன்றைக்கு இரண்டு முக்கிய செய்திகள் படிக்க நேர்ந்தது.
உடனே நம்ம பிரதமரையும், குடியரசு தலைவரையும் பாராட்ட
தோன்றியது. செய்தியும், விவரமும்....
சீனாவின் பொருளாதார வளர்ச்சி, இந்திய பொருளாதார வளர்ச்சியை விட முன்னணியில் உள்ளது. ஆனால், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியை விட, அடிப்படை மனித உரிமைகள், கலாசாரம் மற்றும் மதரீதியான கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது மிகவும் அவசியம். எனவே, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் செயல்பாடு, சீனாவின் செயல்பாட்டை விட பின்தங்கி இருந்தாலும், சீனாவின் பாதையை தேர்ந்தெடுக்க நான் விரும்பவில்லை. எப்போதும் இந்திய பாதையிலேயே செல்ல விரும்புகிறேன். இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.
செய்தி தினமலர் சுட்டி: http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4260
இதை விட சிறப்பாக ஒரு சனநாயக தலைவர் கருத்து சொல்ல இயலாது. எப்படியோ சுதந்திரம் பெற்ற போது இருந்த தலைவர்கள் இப்படி கருதியதால் இன்றைக்கு நாங்கள் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெற்று இன்புறுகிறோம். எங்கள் சந்ததியினருக்கும் இது கிடைக்கும் என்ற நம்பிக்கை வலுத்து வருகிறது.
ஜனாதிபதி பிரதிபா பட்டீல் சுகோய் -30 எம்.கே.ஐ., ரக போர் விமானத்தில் வெற்றிகரமாக பயணம் மேற்கொண்டார். சர்வதேச அளவில் சுகோய் போர் விமானத்தில் பயணம் செய்த முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை நிலைநாட்டினார். அவர் புனேயில் இருக்கும் லோஹேகான் விமானப்படை தளத்தில் இருந்து சரியாக காலை 11 மணி அளவில் சுகோய்- 30 எம்.கே.ஐ., போர் விமானத்தில் பயணத்தை துவக்கினார். சுமார் 30 நிமிடங்கள் பயணம் நீடித்தது. ஜனாதிபதி பயணித்த விமானத்தை விங் கமாண்டர் எஸ்.சாஜன் இயக்கினார்.
செய்தி தினமலர் சுட்டி : http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1594
சமூகத்தில் ஆண், பெண் இனப் பேதம் அடிமட்டத்தில் ஆங்காங்கே இருந்தாலும் பாலின பாகுபாடு இன்றி இந்திய நிர்வாகத்தில் பெண்களுக்கு கிடைத்து வரும் உரிமைகள் சில வளர்ந்து நாடுகளிலேயே கிடைக்காத அளவு உள்ளதாக இருக்கிறது. விமான பயணத்தினால் பெண்களுக்கு பெரிய நன்மை என்று அர்த்தம் கிடையாது. இந்திரா, பிரதிபா போன்று எந்த பெண்மணிகள் வந்தாலும் நம் சமூகம் சரி சமமாகவே நடத்துகின்றது என்பது மிகவும் மகிழ்வான விசயமே.
பாராட்டும், வாழ்த்தும் சொல்ல இமயமலையை நகர்த்தினால் தான் செய்யனும் என்று இல்லையே... :)
0 comments:
Post a Comment