Friday, December 4, 2009

கான்டிராக்டில் நீதிபதிகள்

சமீபத்திய மத்திய அமைச்சரவை சுவாரசியமான முடிவுகள் சிலவற்றை எடுத்துள்ளது.

கான்டிராக்ட் அடிப்படையில் மாதம் ரூ. 1 லட்சம் சம்பளத்திற்கு, 1500 நீதிபதிகளை நியமிக்க மத்திய அமைச்சவரை ஒப்புதல் அளித்துள்ளது.
ஏகப் பட்ட வழக்குகள் தேங்கி போய் உள்ளது. ஓரளவு குறைய வாய்ப்புண்டு. அதே சமயம் இந்த நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் போன்ற தலைவலிகள் கிடையாது. அரசுக்கு ஏகப் பட்ட லாபம்.

தேசிய வழக்கு நிலுவை ஆணையம் என்ற அமைப்பை உருவாக்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அப்பாடா தேர்தல் ஆணையம் போல ஒரு அமைப்பு. சும்மா சும்மா விடுப்பு விட்டு விளையாடும் அமைப்பிற்க்கு ஒரு கடிவாளம் போட கூடும்.பருவகால (கோடைகால) விடுமுறை பள்ளி மாணவர்களுக்கு இருப்பது போல நீதிமன்றத்திற்க்கு தேவையா என்ன?

7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கத்தக்க அனைத்து குற்றங்களிலும், ஒருவரை கைது செய்வதற்கான காரணங்களை சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி எழுத்துமூலம் எழுதித்தர வேண்டும்.
இதனால் என்ன பயன் என்று புரியலே.. :( குறைவான கால குற்றத்திற்க்கு கைது செய்து காலம் தாழ்த்தி இழுத்தடிப்பது தானே தற்போது நடைமுறையில் இருக்கு.

தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு. கொஞ்சமாவது காடுகள் காப்பாற்ற பட்டால் சரி.

அதேசமயம், கல்வி தீர்ப்பாயம் குறித்த திட்டத்தை அமைச்சர்களைக் கொண்ட குழுவின் ஆலோசனைக்கு அனுப்பி வைக்கவும் அமைச்சரவை முடிவு செய்தது.
அவசரமான தேவையா தெரியலே. மெதுவா வரட்டும்.

ரூ. 10,000 கோடி மதிப்பீட்டில், பாதுகாப்புப் படையினருக்கான ஆப்டிகர் பைபர் கேபிள் அமைக்கும் பணியில் சீன நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது என மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஏனோ சீனாவிற்க்கு சிரம தசை ஆரம்பம் போல தான் தெரியுது. காரணம் இது போன்ற மக்களாட்சி நாடுகளில் இப்படி குறிப்பிட்டு நாட்டு நிறுவனங்கள் தடை என்பது அவ்வளவு எளிது அல்ல. இதற்க்கு முன்னர் நம் நாட்டிலேயே கம்யூனிஸ்டுகள் அமெரிக்க ஏகாதிபத்தியம் குறித்து அறிக்கை தான் விடுவார்களே தவிர இப்படி அமெரிக்க நிறுவனங்கள் எதற்க்கும் அனுமது கூடாது என்று அமலாக்கியதில்லை. வெளியே ‍‍பெரிசா அறிக்கை தான் விடுவார்கள்.

இன்றைய அளவில் இது ஒரு சிறிய ஆரம்பம் தான் எனினும் காலப் போக்கில் பிற நாடுகளும் இந்த தடை நடவடிக்கைகள‍ை அமல்படுத்த ஆரம்பிக்கும். ‍ஏனெனில் அனைவருக்கும் அவரவர் நாட்டு பாதுகாப்பில் சீன என்ன ஊடுருவல் செய்யுமோ என்ற அச்சம் தானாக பிறக்குமே... :)

1 comments:

சிவகுமார் December 4, 2009 at 7:51 PM  

பின்னூட்ட சோதனை.

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP