செவ்வாயில் உயிரினம் : நாசா
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்திருக்க கூடும் என்பது குறித்து நாசா புதிய அறிவிப்பு விடும் என்று எதிர்பார்க்க படுகிறது. ஆனால் வித்தியாசமாக செவ்வாயில் ஆராயமல் அண்டார்டிக் பகுதியில் கடந்த 1996 ம் ஆண்டு ஒரு பாறையானது 13,000 ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்து பூமியில் விழுந்தது என்று அடையாளம் காணப் பட்டு, அதற்க்கு 'அலென் ஹில்ஸ் 84001' என்றும் பெயரிட்டுள்ளார்கள்.
அந்த பாறையில் உயிர்த் தன்மைக் கொண்ட படிமங்கள் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் அது செவ்வாயில் இருந்த உயிரிகள் என்பதை பெரும்பாலோனோர் ஏற்றுக் கொள்ளாது நிராகரித்தனர். அந்த பாஸில்கள் பாறை பூமியில் மோதியதால் ஏற்பட்ட பூமியை சார்ந்த உயிர்மங்கள் என்று முடிவானது.
1996 ல் இருந்ததை விட இன்றைக்கு மிக அதி நவீன நுண்ணிய நோக்கிகள் (மைக்ரோஸ்கோப்புகள்) வந்து விட்டன. அவற்றின் உதவியுடன் கேத்தி தாமஸ்-கெர்டா என்ற நாசாவின் விஞ்ஞானிகள் மீண்டும் ஆராய தொடங்கினர். அவர்கள் ஆராய்ச்சியின் முடிவில் கார்பொனைட் மற்றும் மக்னீஸிய உலோக படிகங்களை அந்த பாறையில் கண்டறிந்துள்ளார்கள். இவ்வாறு அந்த பாறையில் காணப்படும் உலோகங்கள் நமது பூமியின் வழமைக்கு மாறாக வேதியியல் மற்றும் இயற்பியல் தன்மைகள் அடங்கியதாக உள்ளன.
இந்த உலோக படிகங்கள் 13,000 ஆண்டுகளுக்கு முன் உண்டானவை அல்ல, நிச்சயமாக அதற்க்கு முற்காலத்தே (செவ்வாயில்) உருவாகியிருக்க வேண்டும்.
இந்த பாறையில் உள்ள படிமங்கள் பூமியில் உண்டானவைகள் அல்ல என்பது நிரூபிக்க பட்டால் சூரிய குடும்பத்தில் உயிரினங்கள் தோன்றியது குறித்த அறிவு மேலும் அதிகமாகும் என்பதாக இங்கிலாந்தின் 'அஸ்ட்ரானமி நவ்' இதழின் துணையாசிரியர் எமிலி பால்ட்வின் கூறியுள்ளார்.
இது குறித்த மேலதிக தகவல் கட்டுரை சுட்டி